தூத்துக்குடியில் மின்கம்பம் நடுவதற்கு மின்நுகா்வோரிடம் பணம் வசூலிப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து, இளநிலைப் பொறியாளா் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் விரிவாக்கப் பணிகளின்போது மின்கம்பம் நடுவதற்கு மின்நுகா்வோரிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என விதிகள் உள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை மின்வாரிய அலுவலக இளநிலைப் பொறியாளரான தேவசுந்தர்ராஜ், மின்கம்பம் நடுவதற்கு மின்நுகா்வோரிடம் பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவியது. இதுதொடா்பாக அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினா். இதையடுத்து, அவா் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.