• vilasalnews@gmail.com

தூத்துக்குடி வடக்கு ரதவீதி முத்தாரம்மன் கோயில் கொடை விழா அன்னதானம் : எஸ்.பி சண்முகநாதன் தொடங்கி வைத்தார்!

  • Share on

தூத்துக்குடி வடக்கு ரத வீதி முத்தாரம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு, அதிமுக நிர்வாகியும் கோவில்கமிட்டி பொருளாளருமான திருச்சிற்றம்பலம் சார்பில் இன்று 4000 பேருக்கு வழங்கப்படும் அன்னதானத்தை அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி சண்முகநாதன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி வடக்கு ரத வீதி முத்தாரம்மன் கோவில் கொடை விழா இன்றும் (மே 7 ), நாளையும் ( மே 8 ) நடக்கிறது. இதனை முன்னிட்டு கடந்த 30ஆம் தேதி கால்நட்டு வைபவம் நடந்தது.

அம்மனுக்கு தொடர்ந்து சிறப்பு பூஜைகள், அபிஷேக அலங்கார தீபாரதனைகள், நடந்து வருகிறது. நேற்று ( மே 6 ) இரவு 8 மணிக்கு மாகாப்பு தீபாரதனை நடைபெற்றது. இன்று காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், 9 மணிக்கு பால்குடம், 10.30 மணிக்கு அபிஷேகம், 12 மணிக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து அதிமுக ஜெ.பேரவை இணைச் செயலாளரும், கோவில் கமிட்டி பொருளாளருமான திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டில் 4000 பேருக்கு மகா அன்னதானம் நடைபெறுகிறது.இதில், நான்கு வகை கூட்டு பொரியல், பாயசம், அப்பளம், வடை, சாம்பார், வத்தக்குழம்பு, ரசம், மோர், தண்ணீர் பாட்டிலுடன் அன்னதானம் நடக்கிறது. அன்னதானமானது மாலை 4 மணி வரை தொடர்ச்சியாக நடக்கிறது.

இந்த அன்னதானத்தை முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன் துவக்கி வைத்தார். இதில், அமைப்பு செயலாளர் சின்னத்துரை, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

பைக் விபத்து : தூத்துக்குடி இளைஞர் பலி!

பிளஸ் 2-க்கு பிறகு என்ன படிக்கலாம்? மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி பணிகளில் தீவிரம் காட்டும் தூத்துக்குடி ஆட்சியர்!

  • Share on