தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி 3 சென்ட் அந்தோணியார் புரத்தைச் சேர்ந்தவர் அபி கணேஷ் ( 19 ). செல்வ விநாயகபுரத்தைச் சேர்ந்த அவரது நண்பர் பிரகாஷ் ( 20 ) நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சத்யா நகர் பாலத்தில் சென்று கொண்டு இருந்த போது, அவர்களது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த சாலையோர தடுப்பில் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில், சிகிச்சையில் இருந்த அபி கணேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். பிரகாஷ் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். விபத்து குறித்து தென்பாகம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.