• vilasalnews@gmail.com

ஏரல் அருகே தடுப்பணையில் மூழ்கி தூத்துக்குடி முதியவர் பலி!

  • Share on

ஏரல் அருகே தடுப்பணையில் மூழ்கி தூத்துக்குடியைச் சேர்ந்த முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மட்டகடை பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் ( 62 ) . இவரும் இவரது உறவினர் ஆறுமுகம் என்பவரும் ஏரல் அருகே உள்ள மங்கலகுறிச்சி தடுப்பணையில் குளிப்பதற்காக நேற்று மாலையில் சென்றாராம். அப்போது கனகராஜ் எதிர்பாராமல் நீரில் மூழ்கினராம். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஏரல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஏரல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  • Share on

கோடை வெயில் தாக்கம் : திருச்செந்தூரில் உற்சாக குளியல் போடும் யானை தெய்வானை!

பைக் விபத்து : தூத்துக்குடி இளைஞர் பலி!

  • Share on