தூத்துக்குடியில் மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :
தூத்துக்குடி முத்தையாபுரம் ராஜ கணபதி நகரை சேர்ந்தவர் நாகேந்திரன் (55). லாரி டிரைவர். இவரது மனைவி ரெஜினா மேரி (47). கூலி வேலைக்கு சென்று வருகிறார். ரெஜினா மேரியின் நடத்தையில் சந்தேகமடைந்த நாகேந்திரன் மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று கணவன் மனைவிக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நாகேந்திரன் மனைவி ரெஜினா மேரியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளார். இதில் படுகாயமடைந்து கிடந்த ரெஜினா மேரியை அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் வேல் குமார் வழக்குப் பதிவு செய்து நாகேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.