• vilasalnews@gmail.com

விளாத்திகுளம் டி.எஸ்.பிக்கும் - அதிமுகவினருக்கிடையே கடும் வாக்குவாதம் : ஒருமையில் பேசியதால் கொந்தளித்த கட்சி நிர்வாகிகள்!

  • Share on

விளாத்திகுளம் டி.எஸ்.பி அலுவலகத்தில் அதிமுகவினரை டி.எஸ்.பி ஒருமையில் பேசியதால் இருவருக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில்  உள்ள மதுரை சாலையில், அதிமுக நிர்வாகியான பெருமாள் சாமி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தள்ளு வண்டியில் பானிபூரி கடை ஒன்றைத் தொடங்கி நடத்தி வந்துள்ளார். 

இந்தநிலையில், இந்த பானி பூரி கடையை இங்கு நடத்தக்கூடாது என்று எவ்வித காரணங்களும் கூறாமல் விளாத்திகுளம் காவல்துணை கண்காணிப்பாளர் இராமகிருஷ்ணன் கூறியதாக காவலர்கள் பெருமாள் சாமி-யிடம் கடையை காலி செய்ய சொல்லியதாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து நேற்று, விளாத்திகுளம் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில் பெருமாள் சாமி உட்பட ஏராளமான கட்சியினர் விளாத்திகுளம் டிஎஸ்பி அலுவலகத்திற்கு சென்று டி.எஸ்.பி இராமகிருஷ்ணனிடம் கடையை காலி செய்ய கூறியதற்கான காரணம் என்னவென்று கேட்டனர்.


அதற்கு டி.எஸ்.பி. இராமகிருஷ்ணன் விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறி கடையை மாற்று இடத்திற்கு கொண்டு செல்லும்படிதான் அறிவுறுத்தி உள்ளோம் என கூறினார். அப்போது பேச்சுவார்த்தையின் போது, விளாத்திகுளம் டிஎஸ்பி இராமகிருஷ்ணன் கட்சி நிர்வாகிகளை மிரட்டும் தொனியில் ஒருமையில் பேசியதால் கட்சி நிர்வாகிகளுக்கும் - காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் உட்பட கட்சி நிர்வாகிகள் டி.எஸ்.பி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு வெளியே சென்றனர்.

மேலும், டி.எஸ்.பி அலுவலகத்தின் முன்பும் காவல்துறை அதிகாரிகளிடம் அதிமுகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  • Share on

எட்டயபுரத்தில் அதிமுக சார்பில் நீர்மோர், தண்ணீர் பந்தல் : முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ திறந்து வைத்தார்!

இந்திய குடிமைப்பணி தேர்வு : வெற்றி பெற்ற தூத்துக்குடி மருத்துவருக்கு ஆட்சியர் வாழ்த்து!

  • Share on