• vilasalnews@gmail.com

எட்டயபுரத்தில் அதிமுக சார்பில் நீர்மோர், தண்ணீர் பந்தல் : முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ திறந்து வைத்தார்!

  • Share on

எட்டயபுரம் நகர அதிமுக சார்பில், நகர செயலாளர் ராஜகுமார் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள  நீர்மோர், தண்ணீர் பந்தலை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ திறந்து வைத்தார்.

தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் காரணமாக மக்களின் தாகத்தை போக்கும் வகையில் ஆங்காங்கே நீர்மோர், தண்ணீர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து, தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் அக்கட்சியின் நிர்வாகிகள் ஆங்காங்கே நீர்மோர், தண்ணீர் பந்தல்களை திறந்து வருகின்றனர்.

இந்த நிலையில், எட்டயபுரம் நகர அதிமுக சார்பில், எட்டயபுரத்தில் நகர செயலாளர் ராஜகுமார் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள  நீர்மோர், தண்ணீர் பந்தலை, விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் முன்னிலையில், இன்று அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி பொருளாளரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜு திறந்து வைத்தார்.

இதில், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கண்ணன் சுப்புராஜ்,எட்டயபுரம் அவைத்தலைவர் கணபதி, வார்டு செயலாளர்கள், கார்டன் பிரபு, சின்னத்துரை, கருப்பசாமி, சிவ சிவா , ஜெயக்குமார், சீனா என்ற முத்துகிருஷ்ணன், சொக்கன், சிவசங்கர பாண்டியன், மூர்த்தி, செல்வி, சாந்தி, ரத்தினம் , அதிமுக நிர்வாகிகள் வேலுச்சாமி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிய 6 பேர் கைது!

விளாத்திகுளம் டி.எஸ்.பிக்கும் - அதிமுகவினருக்கிடையே கடும் வாக்குவாதம் : ஒருமையில் பேசியதால் கொந்தளித்த கட்சி நிர்வாகிகள்!

  • Share on