• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிய 6 பேர் கைது!

  • Share on

தூத்துக்குடியில் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 6 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியில் மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில், வடபாகம் காவல் ஆய்வாளர் பிரேம் ஆனந்த் தலைமையிலான போலீசார், மட்டக்கடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில், 3 இருசக்கர வாகனத்தில் சுற்றி திரிந்த 6 பேரை பிடித்து சோதனை செய்தனர். 

அப்போது அவர்களிடம் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

மேலும், அவர்கள் விருதுநகர் மாவட்டம் கம்பம்பட்டி தெருவை சேர்ந்த விஜய் என்ற கருப்பசாமி (வயது 23), முத்தழகு என்ற அருள்(30), விருதுநகர் கஸ்தூரிபாய் நகரை சேர்ந்த சந்தனபாண்டி (21), விருதுநகர் ரோசன்பட்டி அரண்மனை தெருவை சேர்ந்த சக்திவேல் (25), அம்பேத்கர் நகரை சேர்ந்த வல்லரசு (25), தூத்துக்குடி தாளமுத்துநகர் கோமாஸ்புரம் ராஜீவ்காந்தி குடியிருப்பை சேர்ந்த ராஜா (38) ஆகியோர் என்பதும் தெரியவந்தது.

இவர்கள் மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைதாகி ஜாமீனில் வெளிவந்திருப்பவர்கள் என்பதும், இவர்கள் சதி திட்டத்துடன் சுற்றித்திரிந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து அந்த 6 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Share on

அன்று தொல்லை... இன்று அடர் வனம் : பாராட்டு மழையில் நனையும் மேயர் ஜெகன் பெரியசாமியும்; தூத்துக்குடி மாநகராட்சியும்!

எட்டயபுரத்தில் அதிமுக சார்பில் நீர்மோர், தண்ணீர் பந்தல் : முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ திறந்து வைத்தார்!

  • Share on