வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தூத்துக்குடியில் பாட்டாளி மக்கள் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி ஜன.29-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கட்சியினர் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்திருந்தார். இதன்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஜி.ராமசந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில், மாநில துணை அமைப்பு தலைவர் பெரியநாயகம், மாநில இளம்பெண்கள் அணி துணைத் தலைவர் பிரேமா, தெற்கு மாவட்ட தலைவர் நட்டாமை சிவபெருமாள், மத்திய மாவட்ட தலைவர் பனையூர் பாண்டி, வடக்கு மாவட்ட தலைவர் மாடசாமி, அமைப்பு செயலாளர்கள் காளிராஜ், இசக்கிவேல், ரமேஷ், மாநில இளைஞர் அணி முகம்மது மொய்தீன், மகராஜா, தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் சின்னதுரை, தெற்கு மாவட்ட செயலாளர் பரமகுரு, வடக்கு மாவட்ட செயலாளர் வேலுச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.