தூத்துக்குடியில் அதிகாலை வேளையில் மேம்பாலத்தில் தடுப்புச் சுவரில் அரசு பேருந்து மோதிய விபத்துக்குள்ளானது.
மதுரையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி புறப்பட்ட அரசு பேருந்து இன்று அதிகாலை தூத்துக்குடி - திருச்செந்தூர் பிரதான சாலையில் வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தில் நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரம் சேர்ந்த முருகப்பெருமாள் (43) என்பவர் டிரைவராகவும், முத்து செல்வம் என்பவர் கண்டக்டராகவும் பணியில் இருந்தனர். பஸ்ஸில் 37 பயணிகள் செய்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 3.50 மணியளவில் தூத்துக்குடி சத்யா நகர் அருகே உள்ள மேம்பாலத்தில் செல்லும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் முன்பகுதி சேதம் அடைந்தது. அதில் இருந்த 37 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். உடனடியாக பயணிகள் மாற்று பேருந்து மூலம் திருச்செந்தூர் அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.