தூத்துக்குடி வடக்கு ரத வீதியில் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் பொருட்டு அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் பொருட்டு நீர் - மோர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அதிமுகவினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, தூத்துக்குடி வடக்கு ரத வீதியில் தெற்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை, அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் திறந்து வைத்து தண்ணீர் பந்தலில் இளநீர், பழவகைகள், தண்ணீர்பழம், தர்பூசணி ஜூஸ், கிர்ணி, வாழைப்பழம், வெள்ளரி, ரோஸ்மில்க், மோர் போன்றவைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரும், மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன், அமைப்பு செயலாளர் சின்னதுரை, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர், முன்னாள் மாவட்ட செயலாளர் இரா.ஹென்றி உள்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.