எப்போதும்வென்றான் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் தனியார் எண்ணெய் மில் சூப்பர்வைசர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ராமசந்திரன் (63). இவர் எப்போதும்வென்றான் பகுதியில் உள்ள எண்ணெய் மில்லில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில், நேற்று மாலை பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது, சோழபுரம் விலக்கு அருகே சென்றபோது, திண்டுக்கல்லில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த கார் அவரது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ராமசந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து எப்போதும் வென்றான் காவல் நிலைய ஆய்வாளர் முருகன் வழக்குப் பதிவு செய்து காரை ஒட்டிவந்த ஆண்டிபட்டியைச் சேர்ந்த ராமசாமி மகன் ஆனந்த் குமார் (63) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.