தூத்துக்குடி மாநகராட்சியில் ஏப்.30 ஆம் தேதிக்குள் வரியை செலுத்தி 5 சதவீதம் தள்ளுபடி பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள கட்டிடங்களின் உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2024-2025 ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்து வரியினை ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் செலுத்தி ஐந்து சதவீதம் தள்ளுபடியினை பெற்று பயன்பெறுமாறும், மாநகராட்சி வளர்ச்சி பணிகளில் தங்களின் பங்களிப்பினை வழங்கிடுமாறும் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தெரிவித்துள்ளார்.