தூத்துக்குடியில் அதிமுக, திமுகவினரிடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி எஸ் எஸ் பிள்ளை மார்க்கெட் அருகே அமைந்துள்ள வடக்கு பத்திரகாளி அம்மன் கோவில் தெருவில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்குள் திமுகவை சேர்ந்த வெளி நபர்கள் உள்ளே வந்ததிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் அதிமுக வழக்கறிஞர்கள் ஆகியோருக்கிடையே மோதல் மற்றும் கைகலப்பு ஏற்பட்டது.
அந்த வாக்குச்சாவடியில், அதிமுக மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் மைக்கேல் ஸ்டேனிஸ் பிரபு வாக்களிக்க சென்றுள்ளார். அப்போது அவருடன் வாக்களிக்க அதிமுகவினரும் சென்றுள்ளனர்.
இந்நிலையில், வாக்குச்சாவடி மையத்திற்குள் திமுகவை சேர்ந்த அந்த பகுதிக்கு சம்பந்தம் இல்லாத பூத் ஏஜெண்டும் இல்லாத தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த அதிர்ஷ்டராஜ் என்ற திமுக நிர்வாகி சில திமுக கட்சியினர்களுடன் வந்துள்ளார். இதற்கு அதிமுக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்களிடையே மோதல் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து, அங்கு வந்த வடபாகம் காவல் ஆய்வாளர். பிரேம் ஆனந்த் தலைமையில் காவல்துறையினர் இரு தரப்பையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.