தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இன்று மாலை 5 மணி நிலவரப்படி 59.96% வாக்குகள் பதிவாகி உள்ளது.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். தூத்துக்குடி தொகுதியில் பாராளுமன்ற மொத்தம் 1,624 வாக்குச்சாவடிகளில் 14,58,430 வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர்.
இந்நிலையில் இன்று மாலை 5 மணி நிலவரப்படி 59.96% வாக்குகள் பதிவாகி உள்ளது.
சட்டமன்ற தொகுதி வாரியாக 5 மணி நிலவரம்
கோவில்பட்டி 59.13%
ஓட்டப்பிடாரம் 61.18%
ஸ்ரீவைகுண்டம் 56.00%
தூத்துக்குடி 55.26%
திருச்செந்தூர் 62.70%
விளாத்திகுளம் 66.89%