• vilasalnews@gmail.com

தூத்துக்குடி தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் - அதிமுக வழக்கறிஞர் மந்திரமூர்த்தி கோரிக்கை!

  • Share on

தூத்துக்குடியில் வாக்களர்களுக்கு திமுகவினர் பணம் விநியோகித்து வருகின்றனர். ஆகவே ஜனநாயகத்திற்கு விரோதமாக தூத்துக்குடி தொகுதியில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என  அதிமுக மாமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான மந்திரமூர்த்தி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்துள்ளார்.

தமிழகத்தில் நாளை மறுநாள் ஏப்ரல் 19 ம் தேதி 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. இந்த நிலையில் தொகுதி முழுவதும் திமுக வேட்பாளர் கனிமொழி தரப்பில் இருந்து வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக திருநெல்வேலி மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளரும், தூத்துக்குடி மாநகராட்சி எதிர்கட்சி கொறடாவும், வழக்கறிஞருமான மந்திர மூர்த்தி கூறுகையில் :-

திமுக அரசின் கடந்த மூன்றாண்டு ஆட்சியின் அவலநிலையை கண்டு பொதுமக்கள் திமுக மீது கடும் கொந்தளிப்பில் உள்ளனர். அதன் தாக்கம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்க உள்ளது. அந்த வகையில், தூத்துக்குடி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணிக்கு ஆதரவு பெருகி உள்ளது. இதனால் தூத்துக்குடி தொகுதியை அதிமுக கைப்பற்றக்கூடும் நிலை ஏற்பட்டுள்ளதால், கடும் அதிர்ப்தி அடைந்த திமுக வேட்பாளர் கனிமொழி, தனது கட்சியினர் மூலம் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி முழுவதும் ஒரு வாக்கிற்கு 300 ரூபாய் வீதம் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக நாங்கள் மாவட்டம் முதல் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வரை புகார் அளித்துள்ளோம். மேலும், ஜனநாயகத்திற்கு விரோதமாகவும், தேர்தல் விதிமுறைகளுக்கு எதிராகவும் திமுக வேட்பாளர் கனிமொழி தரப்பினர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்து வருவதால், உடனடியாக தூத்துக்குடி தொகுதியில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு வழக்கறிஞர் மந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

  • Share on

வீரன் சுந்தரலிங்கம் பிறந்த நாள் : தமிழக வெற்றிக் கழகத்தினர் மரியாதை

தூத்துக்குடி லாட்ஜ்ஜில்.. டக் டக்னு நுழைந்த போலீஸ்.. யாரது? இங்கே என்ன வேலை? சாட்டையை சுழட்டும் காக்கிகள்!

  • Share on