ஓட்டப்பிடாரம் அருகே கவர்னகிரியில் வீரன் சுந்தரலிங்கம் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சுந்தரலிங்கத்தின் 254வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தூத்துக்குடி மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் கட்சியினர், ஓட்டப்பிடாரம் அருகே கவர்னகிரியில் உள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.