தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில் இன்று தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதி மொழி எடுக்கப்பட்டது.
இன்று (29.01.2021) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதி மொழி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில் காவல் துறையினர் மற்றும் காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் 2 நிமிடம் மவுனம் கடைப்பிடிக்கப்பட்டு பின்னர் கீழ் கண்டவாறு உறுதி மொழி எடுக்கப்பட்டது.
இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன்/குடிமகள் ஆகிய நான் நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாக கொண்டு எவர் மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைபிடிக்கமாட்டேன் என்று இதனால் உளமாற உறுதியளிக்கிறேன். அரசியலமைப்பின் அடிப்படை கருத்திற்கிணங்க சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன். இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமாற உறுதியளிக்கிறேன்.” என்று உறுதி மொழி ஏற்கப்பட்டது.
இதில், தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கோபி, தூத்துக்குடி தலைமையிட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் செல்வன், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் பழனிக்குமார், மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் பேச்சிமுத்து, காவல் கட்டுப்பாட்டு அறை ஆய்வாளர் ஏழுமலை, காவல்துறை அமைச்சுப்பணி நிர்வாக அதிகாரிகள் சங்கரன், அலுவலக கண்காணிப்பாளர்கள் மாரிமுத்து, கணேசபெருமாள், மாரியப்பன், அருணாசலம், காவேரி, சரஸ்வதி, இளநிலை உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், மாவட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் ஊர்க்காவல் பெருமாள், அதிரடிப்படை உதவி ஆய்வாளர் சக்திவேல் உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.