• vilasalnews@gmail.com

தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

  • Share on

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரைத் திருவிழா இன்று (ஏப்.14) கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரா் கோயில் சித்திரைத் திருவிழா இன்று ஏப்.14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 7 மணிக்கு கொடிபட்டம் வீதி உலா நடைபெற்றது. அதைத்தொடா்ந்து, சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. 

பின்னா் மூலஸ்தானம் முன் உள்ள கொடிமரத்தில் காலை 9 மணிக்கு கொடியேற்றப்பட்டது. பின்னா் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலை 11 மணிக்கு திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சி நடந்தது. இன்று தமிழ் புத்தாண்டு என்பதால் காலையிலிருந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 

விழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் ஏப்.23-ஆம் தேதி நடைபெறுகிறது. திருவிழா நாள்களில் காலை-மாலை சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியருளுகின்றனா். திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிா்வாக அதிகாரி தமிழ்செல்வி, கோவில் அறங்காவலா் குழுத் தலைவா் கந்தசாமி, தலைமை அா்ச்சகா் செல்வம் பட்டா் மற்றும் உபயதாரா்கள் செய்து வருகின்றனா். கொடியேற்ற நிகழ்ச்சியில், பெருமாள் கோவில் அறங்காவலா் குழுத் தலைவா் செந்தில் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

'சைக்கிள்' வேகம் குறைந்தால் கனிமொழிக்கு ஆபத்தா ? தூத்துக்குடி கள நிலவரம் தரும் அதிர்ச்சி ரிப்போட்!

வீரன் சுந்தரலிங்கம் பிறந்த நாள் : தமிழக வெற்றிக் கழகத்தினர் மரியாதை

  • Share on