எட்டையபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணிக்கு ஆதரவாக, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ ஆலோசனையின் பேரில், விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் வழிகாட்டுதலின் படி நகர செயலாளர் ராஜ குமார் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு வீடு வீடாக சென்று சூறாவளி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்நிகழ்வில், அதிமுக வார்டு செயலாளர்கள் செல்வி, சாந்தி, கார்ட்டன் பிரபு, மூர்த்தி, கருப்பசாமி, சின்னத்துரை, சிவ சிவா, ஜெயக்குமார், வேலுச்சாமி, ரத்தினம், உஷா, சீனா என்ற முத்துகிருஷ்ணன், சொக்கன், அவைத் தலைவர் கணபதி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.