நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக அங்கம் வகிக்கும் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்க உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என மேயர் ஜெகன் பெரியசாமி தூத்துக்குடியில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட எஸ்.கே.எஸ்.ஆர் காலனி, எழில் நகர், சக்தி விநாயகர்புரம் மற்றும் கந்தசாமிபுரம் சந்திப்பு ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களிடமும் வியாபாரிகளிடமும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி ஆதரித்து மேயர் ஜெகன் பெரியசாமி வீதி வீதியாக நடந்து சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
இதில், வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், முன்னாள் மாநகர மேயர் கஸ்தூரி தங்கம், மாமன்ற உறுப்பினரும் வட்ட கழக செயலாளருமான தெய்வேந்திரன், மாமன்ற உறுப்பினர் கற்பககனி, வடக்கு மண்டல காங்கிரஸ் தலைவர் சேகர், முன்னாள் வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான இசக்கிமுத்து, முன்னாள் வட்ட செயலாளரும் வட்ட பிரதிநிதியுமான மாரியப்பன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் பெரியசாமி, முன்னாள் வட்ட பிரதிநிதி கண்ணன், வட்ட பிரதிநிதிகள் புஷ்பராஜ், பேச்சுமுத்து, ராஜா, காங்கிரஸ் நிர்வாகி கோபால், முன்னாள் மாநகர விவசாய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன் அவர்கள், மாநகர சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர் வினோத், முன்னாள் மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் வேல்பாண்டி, பகுதி பிரதிநிதி பிரபாகர், முத்துதுரை மற்றும் திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.