• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டம் வளர்ச்சி பாதை நோக்கி செல்ல மீண்டும் கனிமொழி கருணாநிதியே எம்பியாக வர வேண்டும் : மேயர் ஜெகன் பெரியசாமி!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் திமுக ஆட்சியில் முன்னேறி வருகிறது. ஆகவே, மாவட்டத்தின் வளர்ச்சி பாதை தொடர மீண்டும் கனிமொழி கருணாநிதியை எம்பியாக்கிட, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு அளியுங்கள் என தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட போல்டன்புரம் மற்றும் அந்த பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்கா, பிரையன்ட் நகர், சண்முகபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களிடமும் வியாபாரிகளிடமும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதியை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி வாக்குகள் சேகரித்தார்.

இதில், வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், செயற்குழு உறுப்பினர் சி.எஸ்.ராஜா, வட்ட  செயலாளர் சரவணன், மாமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி, முன்னாள் வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான இசக்கிமுத்து, முன்னாள் வட்ட செயலாளர் பார்த்த சாரதி, முன்னாள் வட்ட செயலாளரும் வட்ட பிரதிநிதியுமான மாரியப்பன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் பெரியசாமி, வட்ட  பிரதிநிதிகள் டி.கே.எஸ்.துரை, கிறிஸ்டோபர், முன்னாள் வட்ட பிரதிநிதி கண்ணன், முன்னாள் மாநகர விவசாய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், திமுக நிர்வாகிகள் ஆறுமுககிளி, முத்து கணபதி, சிவபெருமாள், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் செந்தூர்பாண்டி, எஸ்.பி.ராஜன், கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த வட்ட செயலாளர் நாகராஜ், நிர்வாகி தங்கராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆட்டோ கணேசன், திமுக முன்னாள் மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் வேல்பாண்டி, பகுதி பிரதிநிதி பிரபாகர் மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், தோழர்கள், திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த மேயர் ஜெகன் பெரியசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு!

மத்தியில் திமுக அங்கம் வகிக்கும் கூட்டணியின் ஆட்சி அமைய உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் - மேயர் ஜெகன் பெரியசாமி!

  • Share on