• vilasalnews@gmail.com

ராகுல் இன்...மோடி அவுட்! தூத்துக்குடி தேர்தல் பிரச்சாரத்தில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.முரளிதரன் ஆவேசம்!

  • Share on

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் 2 வது முறையாக போட்டியிடும் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதியை ஆதரித்து, தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ் முரளிதரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் நகரில் பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தனர்.

கனிமொழி கருணாநிதி எம்பி தனது முந்தைய ஐந்து ஆண்டு காலத்தில் தொகுதி மக்களுக்கு செய்த நன்மைகளை பட்டியலிட்டு துண்டு பிரசுரமாக அச்சடித்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்து கனிமொழி கருணாநிதிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் செய்த நன்மைகளையும் பொதுமக்களிடம் எடுத்துக் கூறி மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் வாக்கு சேகரித்தார். பொதுமக்கள் நாங்கள் திமுகவிற்கு தான் வாக்களிப்போம் என்று காங்கிரஸ் கட்சியினரிடம் உறுதி அளித்தனர்.

பொதுமக்களிடம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி எஸ் முரளிதரன் கூறுகையில்:-

அண்மையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது அதில் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் உதவி செய்யப்படும் என்று அறிவித்ததை பொதுமக்களிடம் சுட்டிக் காட்டினார். மேலும் படித்த பட்டதாரிகள் வேலையில்லாமல் இருக்கின்றார்கள். 30 லட்சம் காலி பணி இடங்கள் மத்திய அரசில் இருக்கின்றது. காங்கிரஸ் ஆட்சி பொறுப்பை ஏற்ற உடன் 30 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு பட்டதாரிகளை வேலையில் அமர்த்துவோம் என்றும், பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார்.


கனிமொழி கருணாநிதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நேரத்தில் தான் தூத்துக்குடியில் 1000 கோடி ரூபாயில் பர்னிச்சர் பூங்கா, டைட்டல் பார்க், தற்போது மின்சாரத்தில் இயங்கும் கார் தொழிற்சாலை வின் பாஸ்ட் போன்ற தொழில்களுக்கு முன்னுரிமை கொடுத்து அந்தத் திட்டங்களை தூத்துக்குடி தொகுதிக்கு பெற்று தந்திருக்கின்றார் என்று சொல்லி பொதுமக்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த வாக்கு சேகரிப்பில் ஊடகப் பிரிவினுடைய மாவட்ட தலைவர் ஜான் சாமிவேல், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து விஜயா, மாவட்ட துணைத் தலைவர் விஜயராஜ், மண்டல தலைவர் செந்தூர்பாண்டி, மாவட்ட செயலாளர் குமாரமுருகேசன், நாராயணசாமி, வார்டு தலைவர்கள் கிருஷ்ணன், தனுஷ், அருணாச்சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி மாநகர் முழுவதையும் திமுக வசமாக்கும் பணியில் மேயர் ஜெகன் பெரியசாமி... இடைவிடாது தொடரும் தீவிர பிரச்சாரம்!

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த மேயர் ஜெகன் பெரியசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு!

  • Share on