தூத்துக்குடி அமுதாநகர் பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட 6 பேர் நேற்று ஒரே நாளில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 03.03.2024 அன்று தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி அமுதாநகர் பகுதியில் வைத்து அதே பகுதியை சேர்ந்த தங்கமுத்து மகன் கருப்பசாமி (27) என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி அந்தோணியார்புரம் 3 சென்ட் பகுதியை சேர்ந்தவர்களான அந்தோணிசாமி மகன் ராஜா (எ) எலி (25), ஜெயசீலன் மகன் ஆரோன் (எ) ஆரோன் தயாளன் (22), பூவையா மகன் பூபதிராஜா (எ) விஜய் (எ) பூபதி (19), நாகராஜ் மகன் சுடலைமணி (எ) சுடலை (21), தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த சாமி மகன் தமிழரசன் (எ) ஆல்பர்ட் (20) மற்றும் தூத்துக்குடி பக்கிள்புரம் பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் ராஜேஷ் (20) ஆகியோரை தென்பாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கில் தொடர்புடைய ராஜா (எ) எலி, ஆரோன் (எ) ஆரோன் தயாளன், பூபதிராஜா (எ) விஜய் (எ) பூபதி, சுடலைமணி (எ) சுடலை, தமிழரசன் (எ) ஆல்பர்ட் மற்றும் ராஜேஷ் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தூத்துக்குடி அந்தோணியார்புரம் 3 சென்ட் பகுதியை சேர்ந்தவர்களான அந்தோணிசாமி மகன் 1) ராஜா (எ) எலி, ஜெயசீலன் மகன் 2) ஆரோன் (எ) ஆரோன் தயாளன், பூவையா மகன் 3) பூபதிராஜா (எ) விஜய் (எ) பூபதி, நாகராஜ் மகன் 4) சுடலைமணி (எ) சுடலை, தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த சாமி மகன் 5) தமிழரசன் (எ) ஆல்பர்ட் மற்றும் தூத்துக்குடி பக்கிள்புரம் பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் 6) ராஜேஷ் ஆகிய 6 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா மேற்படி 6 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து தூத்துக்குடி பேரூரணி மாவட்ட சிறையில் அடைத்தார்.