• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக மேயர் ஜெகன் பெரியசாமி வாக்கு சேகரிப்பு

  • Share on

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக வியாபாரிகள், பொதுமக்களை சந்தித்து மேயர் ஜெகன் பெரியசாமி வாக்கு சேகரித்தார். 

தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள மக்களவை பொதுத்தேர்தலில் தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழிக்கு உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு கேட்டு, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட நான்காம் கேட், தூத்துக்குடி தனசேகரன் நகரில் உள்ள மாநகராட்சி கரிசல் இலக்கிய பூங்கா, ஹவுசிங் போர்டு மற்றும் எட்டையாபுரம் ரோடு ஆகிய பகுதிகளிலுள்ள வியாபாரிகளிடமும் பொதுமக்களிடமும் மேயர் ஜெகன் பெரியசாமி வாக்கு சேகரித்தார்.


அப்போது, மாநகர துணை செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான கீதா முருகேசன், வட்ட கழக செயலாளர் ராஜாமணி, மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் செல்வகுமார், முன்னாள் வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான இசக்கிமுத்து, முன்னாள் வட்ட செயலாளரும் வட்ட பிரதிநிதியுமான மாரியப்பன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் பெரியசாமி, முன்னாள் வட்ட பிரதிநிதி கண்ணன், முன்னாள் மாநகர விவசாய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், முன்னாள் மாநகர இளைஞரணி துணை வேல்பாண்டி, பகுதி பிரதிநிதி பிரபாகர், முன்னாள் மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் முத்துதுரை மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

  • Share on

மக்களவைத் தேர்தல் : தூத்துக்குடியில் சுயேட்சை வேட்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியனுக்கு உற்சாக வரவேற்பு!

தூத்துக்குடி அமுதாநகர் இளைஞர் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது!

  • Share on