• vilasalnews@gmail.com

மக்களவைத் தேர்தல் : தூத்துக்குடியில் சுயேட்சை வேட்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியனுக்கு உற்சாக வரவேற்பு!

  • Share on

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக சமூக ஆர்வலரும் பெண் உரிமை போராளியுமான அருணாதேவி ரமேஷ் பாண்டியன் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகிறார்.


இதனையடுத்து, தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட முடிவைதேனந்தல், மீனாட்சிபட்டி,  மூலக்கரை, வல்லநாடு, பக்கப்பட்டி, புதுக்கோட்டை , கூட்டாம்புளி, முத்தையாபுரம், முள்ளக்காடு, பாத்திமா நகர், கணேசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு கரும்பு விவசாயி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.


அப்போது அவருக்கு பொதுமக்கள் மாலை மற்றும் பொண்ணாடை அணிவித்து,  ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்ப்பு அளித்து, அருணாதேவி ரமேஷ் பாண்டியனுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்வதாக தெரிவித்தனர்.

  • Share on

உப்பளத்தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம், மழைக்கால நிவாரணத்தொகை உயர்வு, பணியிடத்தில் பெண்களுக்கு கழிப்பறை வசதி : திமுகவின் சாதனைகளை கூறி மேயர் ஜெகன் பெரியசாமி வாக்கு சேகரிப்பு!

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக மேயர் ஜெகன் பெரியசாமி வாக்கு சேகரிப்பு

  • Share on