தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் உப்பளத்தொழிலாளர்களிடம் மேயர் ஜெகன் பெரியசாமி திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக துணைப் பொதுச்செயலாளர் 2 வது முறையாக கனிமொழி கருணாநிதி போட்டியிடுகிறார். இதனையடுத்து, தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் கனிமொழி, திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் உள்ளிட்டோர் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில், திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக தூத்துக்குடி மாநகருக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் துண்டு பிரசுரம் விநியோகித்து உதய சூரியன் சின்னத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி வாக்கு சேகரித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக,
தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில், சத்யா நகர் பாலம் அருகே, பணியில் ஈடுபட்டிருந்த உப்பளத் தொழிலாளர்களிடம் மேயர் ஜெகன் பெரியசாமி திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்பொழுது, உப்பளத்தொழிலாளர்களுக்கு திமுக அரசு தனிநலவாரியம் அமைத்து கொடுத்து இருப்பது, மழைகால நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்கியது உள்ளிட்ட திமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறினார். மேலும், தூத்துக்குடி உப்பளத்தொழிலாளர்களுக்கு பணி செய்யும் இடங்களில் பெண்களுக்கான தனி கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டு வருவதையும் உப்பளத் தொழிலாளர்களிடம் மேயர் ஜெகன் பெரியசாமி எடுத்துகூறி திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார் மேயர் ஜெகன் பெரியசாமி வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து, முத்தையாபுரம் பல்க் ஸ்டாப் பகுதியில் உள்ள கடை வீதிகளில் நடந்து சென்று வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார். அதனையடுத்து, ஸ்பிக் தொழிற்சாலை வாயில் முன்பு தொழிலாளர்களிடமும் மேயர் ஜெகன் வாக்கு சேகரித்தார்.