• vilasalnews@gmail.com

அனைத்து தொழிலாளர்களுக்கும் திமுக அரசு அரணாக இருக்கும் : மேயர் ஜெகன் பெரியசாமி நம்பிக்கை!

  • Share on

தூத்துக்குடி தருவை மைதான பகுதியில் நடைப்பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சிக்கு வந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து மேயர் ஜெகன் பெரியசாமி வாக்கு சேகரித்தார்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி எம்பியை ஆதரித்து, திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடை பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சிக்கு வந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்குகள் சேகரித்தார்.


தொடர்ந்து வி.இ ரோட்டில் கட்டிட தொழிலாளர்கள் மத்தியில்  வாக்குகளை சேகரித்த மேயர் ஜெகன் பெரியசாமி, திமுக ஆட்சியில் கட்டிட தொழிலாளர்களுக்கு செய்யப்பட்ட திட்டங்களையும் உதவிகளையும் எடுத்துக் கூறினார்.

இதில், மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ்லின், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, சி.எஸ்.ராஜா, முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் இசக்கிமுத்து, பெரியசாமி, மாரியப்பன், வட்ட செயலாளர்கள் ரவீந்திரன், பொன்ராஜ், முன்னாள் மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் முத்துதுரை, திமுக பிரதிநிதி பிரபாகர், மின்சார வாரிய தொமுச தலைவர் பேச்சிமுத்து, முன்னாள் வட்ட பிரதிநிதி கண்ணன், வேல்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

என் ஊரின் வளர்ச்சி எனக்கு பெருமை... நம்ம தூத்துக்குடி முன்னேற பாடுபடுவேன் - அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி உறுதி!

மீனவர்கள் நலனுக்காக திமுக அரசு செய்தது என்ன? பட்டியலிட்டு கனிமொழிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த மேயர் ஜெகன் பெரியசாமி!

  • Share on