• vilasalnews@gmail.com

என் ஊரின் வளர்ச்சி எனக்கு பெருமை... நம்ம தூத்துக்குடி முன்னேற பாடுபடுவேன் - அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி உறுதி!

  • Share on

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதியில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார்.

அந்த வகையில் இன்று காலை தூத்துக்குடி சிவன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

அப்பொழுது, தூத்துக்குடி வளர்ச்சி அடைய தீவிரமாக பணியாற்றுவேன். பண்டாரவிளை வைத்தியர் என்னும் பாரம்பரிய குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்தவன். பொதுமக்களின் கஷ்டங்களை நன்கு உணர்ந்தவன். பொதுமக்கள் தங்களது பிரச்சினைகளை எந்த ஒரு சூழ்நிலையிலும் எந்த ஒரு பொழுதிலும் என்னை உடனடியாக அணுகி தெரிவிக்கும் வகையில் நான் இந்த மண்ணின் மைந்தனாக இருந்து வருகிறேன்.


என் மக்களின் வலி எனக்குத்தான் தெரியும். ஆகவே தூத்துக்குடியின் மண்ணின் மைந்தனுக்கு உங்களது வாக்குகளை இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள் என்று அவர் தெரிவித்தார். தொடர்ந்து, அவர் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் வீதி வீதியாக சென்று வாக்குகள் சேகரித்தார்

இதில், தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சண்முகநாதன், மாநில வர்த்தக அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்ல பாண்டியன், அமைப்பு செயலாளர் சின்னதுரை, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், முன்னாள் மாநகராட்சி மேயர் அந்தோணி கிரேசி, அம்மா பேரவை இணைச் செயலர் திருச்சிற்றம்பலம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக தலைமை காரியாலயம் : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்!

அனைத்து தொழிலாளர்களுக்கும் திமுக அரசு அரணாக இருக்கும் : மேயர் ஜெகன் பெரியசாமி நம்பிக்கை!

  • Share on