ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக தலைமை காரியாலயத்தை முப்பிலிபட்டி கிராமத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
மக்களவை பொதுத்தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக தலைமை காரியாலயம் திறப்பு விழா, ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியச் செயலாளரும், ஊராட்சிமன்ற தலைவருமான இளையராஜா ஏற்பாட்டில் முப்பிலிபட்டி கிராமத்தில் நடந்தது. தொடர்ந்து செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சண்முகையா எம்.எல்.ஏ தலைமை வகித்தார். ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியச் செயலாளரும், ஊராட்சிமன்ற தலைவருமான இளையராஜா முன்னிலை வகித்தனர். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு தேர்தல் காரியாலயத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டேவிட் செல்வின், மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரி சங்கர், தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி சுப்பிரமணியன், ஒன்றிய பொருளாளர் மொட்டையசாமி, அவைத்தலைவர் சுப்பிரமணியன், இளைஞரணி அனிஸ்டன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.