தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்கள் மற்றும் எஸ்எஸ் மார்கெட்டிலுள்ள வியாபாரிகள் பொதுமக்களிடமும் மேயர் ஜெகன் பெரியசாமி திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் 2 வது முறையாக திமுக துணைப் பொதுச்செயலாளர் வேட்பாளர் கனிமொழி கருணாநிதி போட்டியிடுகிறார். இதனையடுத்து, தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் கனிமொழி, திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் உள்ளிட்டோர் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில், திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக தூத்துக்குடி மாநகருக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் துண்டு பிரசுரம் விநியோகித்து உதய சூரியன் சின்னத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி வாக்கு சேகரித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்களிடம் மேயர் ஜெகன் பெரியசாமி, திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
அதே போல், எஸ்எஸ் மார்கெட்டிலுள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடமும் மேயர் ஜெகன் பெரியசாமி வாக்குகள் சேகரித்தார்.
இதில், திமுக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பொதுக்குழு உறுப்பினர் சி.எஸ்.ராஜா, மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார், மாநகர மீனவர் அணி அமைப்பாளர் டேனி, முன்னாள் வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான இசக்கிமுத்து, முன்னாள் மாமன்ற உறுப்பினர் பெரியசாமி, முன்னாள் மாநகர விவசாய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.