• vilasalnews@gmail.com

கனிமொழி கருணாநிதியின் 5 ஆண்டு சாதனைகளை துண்டு பிரசுரமாக விநியோகித்து மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வாக்கு சேகரிப்பு!

  • Share on

தூத்துக்குடியில் கனிமொழி கருணாநிதியின் 5 ஆண்டு சாதனைகளை அச்சடித்து துண்டு பிரசுரமாக விநியோகித்து மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர்  கனிமொழி கருணாநிதிக்கு ஆதரவாக இன்று காலை தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கனிமொழி கருணாநிதி கடந்த 5 ஆண்டு காலத்தில் தொகுதி மக்களுக்கு செய்த சாதனைகளை பட்டியலிட்டு அச்சடித்த துண்டு பிரசுரங்களை, மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சி.எஸ் முரளிதரன் தலைமையில், பழைய பேருந்து நிலையம், டபுள்யூ ஜி சி ரோடு, தமிழ் சாலை ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள வணிக பெருமக்களை சந்தித்தும், பொது மக்களை சந்தித்தும் மீண்டும் கனிமொழி கருணாநிதி பெற உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் செலுத்தி அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் கேட்டுக்கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்தனர். 

இந்தப் பிரச்சாரத்தில், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து விஜயா, மண்டல தலைவர்கள் சேகர், செந்தூர்பாண்டி, ராஜன், ஐசன் சில்வா, மாவட்ட ஊடகப் பிரிவு தலைவர் ஜான் சாமுவேல், மாவட்ட சேவா தள தலைவர் ராஜா, மாவட்ட அமைப்புசாரா தொழிற்சங்க தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராகுல், மகிளா காங்கிரஸ் மண்டல தலைவி பிரீத்தி, மகிளா காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் கனியம்மாள், மாவட்ட துணைத் தலைவர்கள் விஜயராஜ், பிரபாகரன், சின்னகாளை, டேவிட் வசந்தகுமார், ரஞ்சிதம் ஜெபராஜ், மைக்கில் பிரபாகர், மாவட்ட செயலாளர் குமார முருகேசன், கதிர்வேல், கோபால், அந்தோணி ஜெயராஜ், நாராயணசாமி மற்றும் வார்டு தலைவர்கள் முனியசாமி, மகாலிங்கம், கிருஷ்ணன், தனுஷ், தாமஸ் ,சிமியான், அந்தோணிசாமி, ஜெயகிங்ஸ்டன், கோபி, ராஜரத்தினம், ராஜன், தெர்மல் பாலகிருஷ்ணன், நெப்போலியன், கனகராஜ்  பெத்து மாரியப்பன், பெத்து கணேஷ், கமலேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் பாஜக கூட்டணி தமாகா வேட்பாளர் எஸ்டிஆர் விஜயசீலன் வாக்கு சேகரிப்பு!

திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக முத்துநகர் கடற்கரையில் பொதுமக்களிடம் மேயர் ஜெகன் பெரியசாமி வாக்கு சேகரிப்பு!

  • Share on