• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் பாஜக கூட்டணி தமாகா வேட்பாளர் எஸ்டிஆர் விஜயசீலன் வாக்கு சேகரிப்பு!

  • Share on

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் பாஜக கூட்டணி தமாகா வேட்பாளர் எஸ்டிஆர் விஜயசீலன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் எஸ்டிஆர் விஜய் சீலன் போட்டியிடுகிறார். இதனையடுத்து தேர்தல் காரியாலயத்தை தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சி துணைத் தலைவர் சசிகலா புஷ்பா, மற்றும் ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் ஏசாதுரை ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் தூத்துக்குடி சிவன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து விட்டு தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் எஸ்டிஆர் விஜயசீலன் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். தொடர்ந்து தூத்துக்குடி நகரின் முக்கிய ரீதியாக சென்று பொது மக்களிடம் வாக்குகள் சேகரித்தார். 

இதில், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சித்ராங்கதன், ஓபிசி அணிமாநில துணைத் தலைவரும் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளருமான விவேகம் ரமேஷ், மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சந்தனகுமார், பொதுக்குழு உறுப்பினர் விஎஸ்ஆர் பிரபு, மாவட்ட செயலாளர் உமரி சத்தியசீலன், மாவட்ட துணைத் தலைவர்கள் வழக்கறிஞர் எஸ்பி வாரியார், சுவைதர், கிழக்கு மண்டல தலைவர் ராஜேஷ் கனி, மகளிர் அணி உஷா தேவி, அமுமுக மாநர் மாவட்ட செயலாளர் பிரைட்டர், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சின்னதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் வெற்றி பெற்றால் என்ன செய்வார்?

கனிமொழி கருணாநிதியின் 5 ஆண்டு சாதனைகளை துண்டு பிரசுரமாக விநியோகித்து மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வாக்கு சேகரிப்பு!

  • Share on