தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் சுயேட்சையாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகிறார்.
அவர் தூத்துக்குடி தொகுதியில் தான் வெற்றி பெற்றால் என்ன செய்வேன் என்று தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். அதன்படி
- விவசாய கடன்கள் முற்றிலும் தள்ளுபடி செய்திட மற்றும் மாத ஊதியம் வழங்கிடப்படும்
- டிகிரி முடித்த அனைவருக்கும் அரசு பணியோ அல்லது சுய தொழிலோ தொடங்கிட வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்
- மீனவ மக்களுக்கு மாத ஊதியம் வழங்குவதோடு அவர்களின் அனைத்து கோரிக்கையும் நிறைவேற்றி தரப்படும்
- உப்பளத் தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படும்
- டெக்ஸ்டைல்ஸ் மற்றும் நெசவுத் தொழில்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்
- பட்டப்படிப்பு வரை தனியார் கல்வியில் மாணவர்களுக்கு 50% வரை இலவச கல்வி கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும்
- 50% மதுகடைகளை மூடிட நடவடிக்கை எடுக்கப்படும்
- தடையின்றி 24 மணி நேரமும் குடிநீர் கிடைத்திட வழி வகை செய்யப்படும்
- குளங்கள், ஏரிகள், ஆறுகள் தூர்வாரி முறையாக பராமரிக்கப்படும்
- தரமான உலகத்தரம் வாய்ந்த சாலைகள் அமைக்கப்படும்
- வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தரமான மருத்துவம் முற்றிலும் இலவசமாக கொடுக்கப்படும்
- சூரிய ஒளி மூலம் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்படும்
- அனைவருக்கும் சொந்தமாக இலவச வீடு வழங்கப்படும்
- பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைக்கப்படும்
- சுங்க சாவடி கட்டணம் முற்றிலும் ரத்து செய்யப்படும்
- பெண்கள் அனைத்து துறைகளிலும் சம உரிமை பெற்றிட நடவடிக்கை எடுக்கப்படும
- விளையாட்டுத்துறை மற்றும் கணினித்துறை மேம்படுத்தப்படும்
- 55 வயதுக்கு மேட்பட்ட அனைத்து முதியோர்களுக்கும் பென்ஷன் வழங்கப்படும்
- வழக்கறிஞர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யப்படும்
- மின்சார ஊழியர்களின் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படும்
உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை அருணாதேவி ரமேஷ் பாண்டியன் அளித்துள்ளார்.