• vilasalnews@gmail.com

அன்று மதுக்கடைகளுக்கு எதிராக கூவிய கனிமொழி வாய் இன்று எங்கே போனது? அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி கேள்வி!

  • Share on

கடந்த எங்களது அதிமுக ஆட்சியில் தான் மதுக்கடைகளால் இளம் விதவைகள் அதிகம் என கூறிய கனிமொழியின் வாய், இந்த மூன்று ஆண்டு அவர்களது விடியா ஆட்சியில் எங்கே போனது என கேள்வி எழுப்பி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கழுகுமலை, கயத்தாறு ஆகிய ஒன்றியங்களில் உள்ள பகுதிகளில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில்:-

நான் வெற்றி பெற்றால் கழுகுமலை, கயத்தாறு பகுதிகளுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் கொண்டு வர பாடுபடுவேன். நான் ஏழை குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால் இங்குள்ள விவசாயிகள், தீப்பெட்டி தொழிலாளர்களின் கஷ்டங்களை உணர்ந்தவன். அதனால் அம்மக்களின் தேவையை அறிந்து அவர்களுக்கான அனைத்து திட்டங்களையும் கொண்டு வருவேன் என்றார்.

மேலும், கடந்த எங்களது அதிமுக ஆட்சியில் தான் மதுக்கடைகளால் தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகம் என கூறிய கனிமொழியின் வாய், இந்த மூன்று ஆண்டு அவர்களது விடியா ஆட்சியில் எங்கே போனது? கடந்த ஆட்சியில் கூடிய இளம் விதவைகளின் எண்ணிக்கையையும், தற்போது 3 ஆண்டு திமுக ஆட்சியில் குறைந்துள்ள விதவைகளில் எண்ணிக்கையையும் அதிகாரபூர்வமாக புள்ளிவிபர எண்ணிக்கைகளோடு ஒப்பிட்டு இந்த தேர்தல் களத்திலே வெளியிட்டு தேர்தலை சந்திக்க கனிமொழி தயாரா?

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தைக் குடித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது  என விளக்கம் கொடுத்த, அந்த கள்ளச்சாரய உயிரிழப்புகளால் தமிழகத்தில் எத்தனை பெண்கள் இந்த விடியா திமுக அரசால் விதவையானர்கள் என்ற எண்ணிக்கை உங்களுக்கு வரவில்லையா? இதை தமிழ்மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? என்றும் கேள்வி எழுப்பி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

  • Share on

தூத்துக்குடி, விளாத்திகுளத்தில் சீமான் இன்று தேர்தல் பரப்புரை!

ஆளுயுர மாலை... பொதுமக்களின் உற்சாக வரவேற்புக்கு மத்தியில் வாக்குகள் சேகரித்த அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி!

  • Share on