• vilasalnews@gmail.com

இன்றும் நாளையும் கனிமொழி எங்கு தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்? அமைச்சர் கீதாஜீவன் தகவல்!

  • Share on

தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட கோவில்பட்டி பகுதிகளில் திமுக வேட்பாளர் கனிமொழி இன்றும் நாளையும் மாலை 4 மணி முதல் வாக்கு சேகரிக்க உள்ளதாக திமுக வடக்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி, கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்றும் நாளையும் (மார்ச் 31 ) இரு தினங்கள் வாக்கு சேகரிக்கிறார். அதன்படி இன்று 30ஆம் தேதி மாலை 4 மணி முதல் நாலாட்டின்புதூரில் தொடங்கி வானரமுட்டி, கழுகுமலை, செட்டிக்குறிச்சி, கயத்தாறு அகிலாண்டபுரம், கடம்பூர், காமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து வாக்குகளை சேகரிக்கிறார்.

நாளை 31ஆம் தேதி மாலை 4 மணி முதல் லிங்கம்பட்டி, தாமஸ் நகர், மணிக்கூண்டு, சண்முக நகர் பேருந்து நிறுத்தம், கடலையூர் சாலை, வடக்குதிட்டங்குளம், முத்துநகர், சண்முக சிகாமணி நகர், பசுவந்தனை சாலை, மந்திதோப்பு ஊத்துப்பட்டி, இடைச்செவல், இனாம் மணியாச்சி ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கிறார்.

அந்தந்த பகுதிக்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திடவும், இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக பங்கேற்கவும் கேட்டுக்கொள்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • Share on

கழுகுமலை, கயத்தார் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி தீவிரவாக்கு சேகரிப்பு!

தூத்துக்குடி, விளாத்திகுளத்தில் சீமான் இன்று தேர்தல் பரப்புரை!

  • Share on