• vilasalnews@gmail.com

மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கும் பிஜேபிக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்ட‌ வேண்டும் : அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!

  • Share on

மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கும் பிஜேபிக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்டும் வகையில் பணியாற்ற வேண்டும் என தோ்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழியை கருணாநிதியை ஆதாித்து முள்ளக்காடு, முத்தையாபுரம், பொட்டல்காடு, பொியசாமிநகர், எம்.ஜி.ஆா் நகர், சத்யாநகர், ராஜபாண்டி நகா், ஆகிய பகுதிகளில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

அப்போது அவர் பேசுகையில், திமுக ஆட்சி அமைந்தபின் கலைஞர் வழியில் தளபதியார் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக செய்து வருகிறார். 

அதே போல் கடந்த ஆண்டு எதிர்பாராமல் பெய்த கனமழையால் ஏற்பட்ட வௌ்ள பாதிப்பின் போது எல்லா தரப்பினருக்கும் நாம் ஓவ்வொரு வகையிலும் உதவிகள் செய்து மக்கள் நலன் தான் முக்கியம் என்று பணியாற்றியுள்ளோம். என்பது பொதுமக்களுக்கு தெரியும். அதிமுக பிஜேபி கட்சிகளுக்கு வரும் தோ்தலில் சாியான பாடம் புகட்ட வேண்டும் என்று பேசினார். 

பிரச்சாரத்தின் போது, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டலத்தலைவர் வழக்கறிஞர் பாலகுருசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில துணைத்தலைவர் சண்முகம், சிபிஎம் செயற்குழு உறுப்பினர் அர்ஜூனன், மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், மாநகர திமுக இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், பெருமாள் கோவில் அறங்காலர்கள் குழு தலைவர் செந்தில்குமார்

திமுக பகுதி செயலாளர் மேகநாதன், இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், மாவட்ட பிரதிநிதி சுரேஷ், செந்தில்குமார், மாமன்ற உறுப்பினர்கள் சுயம்பு, பட்சிராஜன், ராஜதுரை, வைதேகி, வட்ட செயலாளர்கள் மூக்கையா, செல்வராஜ், பகுதி இளைஞரணி அமைப்பாளர் சூர்யா, கிளை செயலாளர்கள் பிரசாத், நடேசன் டேனியல், மனோகரன், சந்தனராஜ், மதிமுக மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் சரவணபெருமாள், பாலசுப்பிரமணியன், மதிமுக நிர்வாகிகள் பொன்ராஜ், மகாராஜன், பொய்யாமொழி மற்றும் திமுகவினர்,  கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து நினைவு தினம் : அமைச்சர், மேயர், மரியாதை

கழுகுமலை, கயத்தார் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி தீவிரவாக்கு சேகரிப்பு!

  • Share on