• vilasalnews@gmail.com

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்!

  • Share on

தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். இதனையடுத்து, வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.

முன்னாள் அமைச்சரும் வடக்கு மாவட்ட செயலாளருமான கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ, முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்ட செயலாளருமான சண்முக நாதன் , முன்னாள் அமைச்சரும் மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன், அமைப்பு செயலாளர் சின்னதுரை, முன்னாள் அமைச்சர் மஃபா.பாண்டியராஜன் ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைப்பெற்றது. 

இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, பேரூர், நகர செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

திமுக வேட்பாளர் கனிமொழியின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் : அதிமுக வேட்பாளர் வலியுறுத்தல்!

தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து நினைவு தினம் : அமைச்சர், மேயர், மரியாதை

  • Share on