தூத்துக்குடியில் பாஜக தெற்கு மாவட்ட நிர்வாகி கார்,அலுவலகம் உடைப்பு இருவர் படுகாயம்,50பேர் மீது வழக்குப்பதிவு
தூத்துக்குடி மாவட்டம்,உடன்குடி மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள திருராமநல்லூரைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் செம்புலிங்கம் (34), உடன்குடி ஒன்றிய பாஜக ஓபிசி அணி செயலாளராக உள்ளார். இவர் சென்னை சோழிங்கநல்லூரில் வாழைப்பழம் மண்டி வைத்து தொழில் செய்து வருகின்றார்.
கடந்த 26ம் தேதி மெஞ்ஞானபுரத்தில் நடந்த நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வரும் வழியில் அதே பகுதியை சேர்ந்த துரைராஜ் மகன் திலீப் என்பவர் காரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அப்பகுதியில் உள்ளவர்கள் சமாதானம் செய்து இருவரையும் அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து, திலீப் சக நண்பர்களிடம் கூறியுள்ளார். இந்நிலையில், நேற்றைய தினம் திலீப் மற்றும் அவரின் நண்பர்களான தினகரன், ஸ்டீபன், ஜெபஸ்,ஜாக்லின், ராம்சிங், பிரவீன், ஜோயல், பெலிஸ்டன், ரெனிஸ், யோசுவா, மற்றும் 50 பேர் கொண்ட கும்பல் செம்புலிங்கத்தின் கார், அலுவலகத்தை சூறையாடியது,அவரின் நண்பர் கிறிஸ்டோபர் மற்றும் அலுவலக உதவியாளர் மந்திரமூர்த்தி ஆகியோரையும் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இருவரும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து மெஞ்ஞானபுரம் காவல் துணை ஆய்வாளர் சுந்தர்ராஜன் 50 பேர் மீது வழக்குப் பதிந்து குற்றவாளிகளை தேடி வருகின்றார்.