தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளா் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் தனது வேட்புமனுவை தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான லட்சுமிபதியிடம் இன்று தாக்கல் செய்தாா்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது. ஆரம்ப நாட்களில் மனுதாக்கல் மந்தமாக இருந்தது. இந்த நிலையில், மார்ச் 25-ம் தேதி பங்குனி உத்திரம் நல்ல நாள் என்பதால் திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுவரை தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளிலும் 600-க்கும் மேற்பட்டோர் மனுதாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (மார்ச் 27) கடைசி நாள் ஆகும். மனுதாக்கலுக்கான அவகாசம் மதியம் 3 மணியுடன் முடிகிறது.
இதனையடுத்து, தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சியான, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளா் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் தனது வேட்புமனுவை தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான லட்சுமிபதியிடம் இன்று தாக்கல் செய்தாா்.