அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி தூத்துக்குடியில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து தனக்கான ஆதரவை திரட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மக்களவைத் பொதுத் தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக அவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான லட்சுமிபதியிடம் தனது வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், தூத்துக்குடியின் பிரபல தொழிலதிபர்களான பி.எஸ்.டி.எஸ் வேல் சங்கர், டிஏ சில்க்ஸ் உரிமையாளர் தெய்வநாயகம், ராஜ்குமார், கோடீஸ்வரன், ஜோ.பிரகாஷ் மற்றும் சமீபத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் பொறுப்பில் இருந்து விலகிய மூத்த அரசியல்வாதி கதிர்வேல் உள்ளிட்டோரை இன்று நேரில் சந்தித்து தனக்கான ஆதரவை திரட்டினார் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி.