• vilasalnews@gmail.com

கனியா? மணியா? இருமுனைப் போட்டி களமாக மாறிய தூத்துக்குடி!

  • Share on

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியை கைப்பற்றப்போவது திமுக வேட்பாளர் கனிமொழியா? அதிமுக வேட்பாளர் வேலுமணியா? என்ற இருமுனைப் போட்டி நிலவி வருகிறது.

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவை பொதுத்தேர்தலில் வெற்றி பெரும் முனைப்போடு ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும் போட்டி போட்டு செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் அந்தந்த கட்சிகள் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களும் களத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். 

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஓர் அணியாகவும், அதிமுக - பாஜக கூட்டணி கட்சிகள் மற்றொரு அணியாகவும் இருந்து தேர்தலை சந்தித்தனர். இதனால் தமிழகம் முழுவதும் இருமுனை போட்டியாக நிலவியது. ஆனால், இம்முறை அதிமுக - பாஜக கூட்டணி முறிவால், திமுக + காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஓர் அணி, அதிமுக + கூட்டணி கட்சிகள் ஓர் அணி, பாஜக + கூட்டணி கட்சிகள் ஓர் அணி என மும்முனை போட்டி சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கடந்த முறை போட்டியிட்டு வென்ற கனிமொழியே மீண்டும் திமுக சார்பில் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் புதுமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார்.  கடந்த சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடி சட்டசபை தொகுதி வேட்பாளராக அதிமுக - பாஜக கூட்டணியில் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எஸ்டிஆர் விஜயசீலன் தான், பாஜக கூட்டணியில் தற்போது தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளராக போட்டியிடுகிறார்.

கடந்த முறை போட்டியிட்டு வென்றவர். கலைஞரின் மகள், முதல்வரின் சகோதரி, தொகுதி மக்களிடையே பெரிய அளவில் அதிர்ப்தியை சம்பாதிக்காதவர் என்பதால் வேட்பாளர் தேர்வில் திமுகவை சேர்ந்த கனிமொழி நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார்.

அதே போல், அதிமுக சார்பில் களம் இறக்கப்பட்டு இருக்கும் வேட்பாளர் சிவசாமி வேலுமணி, தூத்துக்குடியை பூர்வீகமாக கொண்டு இருந்தாலும், சென்னை வாழ் பிரமுகர் என்ற பேச்சுக்கு இடம் கொடுத்தாலும், அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின், மாவட்ட செயலாளர்கள் கடம்பூர் செ.ராஜூ, சண்முகநாதன் இடையேயான பனிப்போர் மறைந்தது. சண்முகநாதன், சி.த.செல்லப்பாண்டியன் இடையேயான ஏழாம் பொருத்தம் தற்சமயம் ஓய்வுக்கு சென்றுள்ளது. இதனால் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மூன்று முன்னாள் அமைச்சர்களும் கைகோர்த்து மூம்மூர்த்திகளாக திகழ்ந்து தேர்தல் பணிகளில் ஈடுபடுவது உள்ளூர் கட்சிகாரர்களிடையே புதிய தெம்பை கொடுத்து, உற்சாகத்தோடு அவர்கள் திகழ்ந்து வருகின்றனர்.

அதே போல், கனிமொழி என்பவர் வீழ்த்த முடியாத வேட்பாளர் கிடையாது. அவரை வீழ்த்துவது எனது பணி என 42 வயது இளைஞரும், புது முக வேட்பாளருமான சிவசாமி வேலுமணியின் ஒன்றை நம்பிக்கை தான், தூத்துக்குடியில் கனியா? மணியா? என்று சொல்லும் அளவிற்கு தேர்தல் களம் அமைந்துள்ளது என ர.ரக்கள் உற்சாகம் பொங்குகின்றனர்.

தங்களது கூட்டணி கட்சி வேட்பாளரை விட்டுக்கொடுக்காமல் தேர்தல் அரசியல் களத்தில் பேசி வந்தாலும், பணிகள் செய்து வந்தாலும், தொகுதியை தமாக விற்கு ஒதுக்கியது பாஜகவினருக்கு ஒரு மனச்சோர்வை தந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. இதனால் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மும்முனை போட்டி என்ற சூழலுக்கு வாய்ப்பில்லாமல் போனது என்கின்றனர் உள்ளூர் அரசியல் பார்வையாளர்கள். 

ஆகவே, தூத்துக்குடி மக்களவைத் தொகுதியை கைப்பற்றப்போவது திமுக வேட்பாளர் கனிமொழியா? அதிமுக வேட்பாளர் வேலுமணியா? என்ற இருமுனைப் போட்டியே ஏற்பட்டுள்ளது.

கனியை வீழ்த்தி வெற்றி மணியை ஜீன் 4 ல் ஒலிக்கச் செய்வாரா வேலுமணி என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

  • Share on

தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி வேட்பு மனு தாக்கல் செய்தார்!

யாருமே சற்றும் எதிர்பாக்கல... தூத்துக்குடியில் காலையிலேயே அதிரடி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

  • Share on