தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்ஆர். சிவசாமி வேலுமணி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் பொதுத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும், சிவசாமி வேலுமணி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான லட்சுமிபதியிடம் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக அவரது மனைவி ஆனந்தி பிரபா தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அப்போது, முன்னாள் அமைச்சகள் கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ, சண்முகநாதன், சி.த.செல்லப்பாண்டியன், அமைப்பு செயலாளர் சின்னத்துரை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
முன்னதாக அவர், தூத்துக்குடி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த வேட்பாளருக்கு அதிமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் எம்பி வழக்கறிஞர் தியாகராஜ் நட்டர்ஜி, முன்னாள் எம்எல்ஏக்கள் சின்னப்பன், மோகன், முன்னாள் மாவட்ட செயலாளர் இரா ஹென்றி, மாநகராட்சி எதிர்கட்சி கொறடாவும் வழக்கறிஞருமான மந்திரமூர்த்தி, அம்மா பேரவை இணை செயலாளர் திருச்சிற்றம்பலம் உட்பட பலர் கலந்து காெண்டனர்.