• vilasalnews@gmail.com

பாஜக., அமமுக உள்ளிட்ட மாற்றுகட்சியினர் அதிமுகவில் ஐக்கியம்

  • Share on

தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக., அமமுக உள்ளிட்ட மாற்றுகட்சியை சேர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.

கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் அன்புராஜ், எட்டயபுரம் நகர செயலாளர் ராஜகுமார், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய இணை செயலாளர் பீக்கிலிபட்டி மணிராஜ் மற்றும் இளம்புவனம் அதிமுக கிளை செயலாளர் கார்த்தி ஆகியோர் ஏற்பாட்டில் 

எட்டையபுரம் மண்டல பாரதிய ஜனதா கட்சியின் ஒன்றிய செயலாளர் ரெங்கசாமி, இளம்புவனம் ஊராட்சி அமமுக கிளை செயலாளர் ரகுவரன் மற்றும் திமுக, பாஜக, அமமுக, உள்ளிட்ட மாற்று கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி,

முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ., தலைமையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன் மற்றும் பெருமாள் ஆகியோர் முன்னிலையில், தங்களை அதிமுகவில் உறுப்பினராக இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தனபதி, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் பால்ராஜ், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், எட்டயபுரம் அவைத்தலைவர் கணபதி, வார்டு செயலாளர்கள் செல்வி, கார்டன் பிரபு, சிவா, ஜெயக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர் அறிவிப்பு!

தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி வேட்பு மனு தாக்கல் செய்தார்!

  • Share on