மக்களவைத் தேர்தலில், பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி வேட்பாளராக எஸ்.டி.ஆர்.விஜயசீலன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 3 தொகுதிகள் பாஜக கூட்டணியில் தமாகா போட்டியிடுகிறது. இதில் ஈரோடு தொகுதி வேட்பாளராக விஜயகுமார், ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளராக வேணுகோபால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தூத்துக்குடி வேட்பாளரும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.