• vilasalnews@gmail.com

தூத்துக்குடி விமான நிலையத்தில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணிக்கு உற்சாக வரவேற்பு!

  • Share on

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் கட்சியினர் பெருந்திரளாக வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. தேர்தலையொட்டி திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்களது கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து வேட்பாளர்களையும் அறிவித்து விட்டன.

தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் அதிமுக வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 2 கட்டங்களாக அறிவித்தார். அதன் படி தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக, தென் சென்னை வட மேற்கு மாவட்டம் தி.நகர் வடக்கு பகுதி அதிமுக செயலாளரான, வட பழனி புத்தூர் கட்டு மருத்துவர் ஆர்.சிவசாமி வேலுமணி அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, சென்னையில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆசிபெற்று விட்டு, விமானம் மூலம் சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்த அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் கட்சியினர் பெருந்திரளாக வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பின் வேட்பாளர் சிவசாமி வேலுமணி, தூத்துக்குடியில் உள்ள தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

  • Share on

வெறிச்சோடிய தூத்துக்குடி தேர்தல் களம்... ஹேப்பி மூடில் திமுக!

தூத்துக்குடி பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர் அறிவிப்பு!

  • Share on