• vilasalnews@gmail.com

வெறிச்சோடிய தூத்துக்குடி தேர்தல் களம்... ஹேப்பி மூடில் திமுக!

  • Share on

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் களத்தில் தூத்துக்குடி தொகுதியில் அரசியல் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்படும் அளவிற்கு திமுகவிற்கு எதிராக எதிர்கட்சிகளின் வேட்பாளர்கள் இல்லாததால் எவ்வித பரபரப்பும் இன்றி, இது தேர்தல் காலம் என்பதே தெரியாத அளவிற்கு தூத்துக்குடி தொகுதி மாறியுள்ளது.

தேர்தல் காலத்தை திருவிழா என்று சொல்லும் அளவிற்கு மிகவும் பரபரப்பாகவும் ஆரவாரமாகவும் இருக்கும். காரணம், களத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கு இடையேயும் தேர்தலில் வெற்றி பெரும் நோக்கோத்தோடு செய்யப்படும் போட்டி  செயல்பாடுகள். ஆனால், தற்போது அதற்கான சூழல் இங்கு தெரியாததால், தூத்துக்குடி தேர்தல் களம் களையிழந்து காணப்படுகிறது.

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதிக்கு திமுக சார்பில் முதன் முதலாக கனிமொழி போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக - அதிமுக கூட்டணியில் அன்றைய பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் போட்டியிட்டார். முடிவில் 3,47,209 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கனிமொழியிடம் தமிழிசை சௌந்திரராஜன் படுதோல்வி அடைந்தார்.

அன்றைய தேர்தல் காலகட்டத்தில் தமிழக ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவோடு பாஜக கூட்டணி அமைத்திருந்தது. மேலும், பாஜகவின் மாநில தலைவரே தூத்துக்குடியில் நேரடியாக போட்டியிட்டார். மேலும், தொகுதியின் பெரும்பான்மை சமூகமாக விளங்கக்கூடிய நாடார் சமூகத்தை சேர்ந்தவர் தமிழிசை. இவ்வளவு பக்கபலம் இருந்தும், அன்றைய தமிழகத்தின் எதிர்கட்சியாக இருந்த திமுக வேட்பாளரிடம் 3,47,209 வாக்கு வித்தியாசத்தில் பாஜக - அதிமுக கூட்டணி வேட்பாளர் தமிழிசை தோற்றார் என்றால்,

தற்போது, தமிழகத்தில் திமுக ஆளும் கட்சியாக இருந்து வருகிறது. கடந்த முறையை போட்டியிட்டு 3,47,209 வாக்கு வித்தியாசத்தில் பெரும்பான்மையாக வெற்றி பெற்ற அதே திமுக வேட்பாளர் கனிமொழி தான் இம்முறையும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். ஆனால், கடந்த முறை இணைந்து போட்டியிட்ட பாஜக அதிமுக, இம்முறை தனித்தனியே களம் காண்கின்றனர். அதில், பாஜக சார்பில் கூட்டணி கட்சியான தமிழ்மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் பன்டாரவிளை வைத்தியர் சென்னை வாழ் அதிமுக பிரமுகர் சிவசாமி வேலுமணி இறக்குமதி செய்யப்பட்டு இருக்கிறார். இவர், திரைப்படத்தில் நடிகர் விஷால் " நானும் மதுரை காரன்தாண்டா" என்று சொல்வது போல, நானும் தூத்துக்குடி காரன் தான். அடிக்கடி தூத்துக்குடி வருவேன். நான் மண்ணின் மைந்தன் வேட்பாளர் தான் என்று கட்சிகாரர்களுக்கு புரிய வைப்பதற்கே தற்போது வரை வேட்பாளர் சிவசாமி வேலுமணி பாடுபட்டு வருகிறாரே தவிர, தற்போது வரை வேட்பாளர் மருமகனுக்காக தெற்கு மாவட்ட அதிமுக சார்பில், மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தேர்தல்  பணிகளை தொடங்கியதாக தெரியவில்லை. 

இப்படியான சூழல் தூத்துக்குடி தொகுதியில் நிலவி வரும் போது, எப்படி இங்கே தேர்தல் களை கட்டும்? கண்ணுக்கு எட்டிய தூரம் எதிரிகளே எங்களுக்கு இல்லை என்று ஜெயலலிதா சொன்னது போல, எங்களை எதிர்த்து போட்டி போட யாராவது இங்கு இருக்கீங்களா? என திமுக எள்ளி நகையாடும் அளவிற்கு தான் தூத்துக்குடி தொகுதியில் எதிர்கட்சிகளின் வேட்பாளர்களும், தேர்தல் பணிகளும் இருக்கிறது என்று களை இழந்த தூத்துக்குடி தொகுதி தேர்தல் களத்தின் அவலங்களை அடுக்குகின்றனர் உள்ளூர் அரசியல் விமர்சகர்கள்

  • Share on

தூத்துக்குடியில் பாஜக கூட்டணியில் தமாக வா? தலையில் துண்டை போட்ட காவி சொந்தங்கள்!

தூத்துக்குடி விமான நிலையத்தில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணிக்கு உற்சாக வரவேற்பு!

  • Share on