• vilasalnews@gmail.com

தூத்துக்குடி செயின்ட் தாமஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வனத்துறையினரால் உலக வன நாள் கொண்டாடப்பட்டது

  • Share on

மார்ச் 21 உலக வன நாளை முன்னிட்டு, செயின்ட் தாமஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வனத்துறையினரால் உலக வன நாள் கொண்டாடப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 அன்று உலக வன நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தூத்துக்குடி  செயின்ட் தாமஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது. இதில் வனச்சரகர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் ராயப்பன்  முன்னிலை வகித்தார்கள்.

இதில்  பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆஸ்கார், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், உலக வன நாளை முன்னிட்டு, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் வனவர் மகேஷ், வன காவலர் லட்சுமணன், சமூக ஆர்வலர் அசோக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி அதிமுக வேட்பாளர் : யார் இந்த சிவசாமி வேலுமணி?

தூத்துக்குடியில் பாஜக கூட்டணியில் தமாக வா? தலையில் துண்டை போட்ட காவி சொந்தங்கள்!

  • Share on