• vilasalnews@gmail.com

தூத்துக்குடி அதிமுக வேட்பாளர் : யார் இந்த சிவசாமி வேலுமணி?

  • Share on

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளராக தென் சென்னை வட மேற்கு மாவட்டம் தி.நகர் வடக்கு பகுதி செயலாளரான, வட பழனி புத்தூர் கட்டு மருத்துவர் ஆர்.சிவசாமி வேலுமணி அறிவிக்கப்பட்டுள்ளார்

யார் இந்த சிவசாமி வேலுமணி?

வயது : 09-05-1982 (42)

தந்தை பெயர் : எஸ்.ராஜா

கல்வித் தகுதி : டி.எம்.ஒய்.எஸ்., (இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியலில் பட்டம் படிப்பு)

தொழில் : அரசியல்வாதி, மருத்துவர்.

பிறந்த ஊர் : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம், மங்களபுரம்.

குழந்தைகள் : 3 பெண்கள், ஒரு ஆண்.

கட்சி பொறுப்பு : அதிமுக தி.நகர் பகுதி செயலராக உள்ளார்.

சிவசாமி வேலுமணி தான் அதிமுக சார்பாக தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு இறுதி செய்யப்பட்ட வேட்பாளர் என்ற தகவல் கடந்த சில நாட்களாக தூத்துக்குடியில் உலா வர தொடங்கியதுமே, அவரும் சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்து, கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் தூத்துக்குடியின் முக்கிய பிரமுகர்களை சந்தித்து தனக்கான ஆதரவை திரட்ட ஆரம்பித்துவிட்டார்.

இந்த நிலையில் தான், இன்று அதிமுக சார்பில் இரண்டாம் கட்ட மற்றும் இறுதி கட்ட வேட்பாளர் பட்டியலில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கான அதிமுக வேட்பாளராக சிவசாமி வேலுமணியை அதிகாரபூர்வமாக பொதுச்செயலாளர் அறித்ததைத்தொடர்ந்து, அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும்  வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடியில் ஒரே நாளில் முன்னாள், இந்நாள் முதல்வர்கள் தேர்தல் பிரச்சாரம்... சூடு பிடிக்கும் தேர்தல் களம்!

தூத்துக்குடி செயின்ட் தாமஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வனத்துறையினரால் உலக வன நாள் கொண்டாடப்பட்டது

  • Share on