• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் ஒரே நாளில் முன்னாள், இந்நாள் முதல்வர்கள் தேர்தல் பிரச்சாரம்... சூடு பிடிக்கும் தேர்தல் களம்!

  • Share on

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வரும் 26 ஆம் தேதி முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமியும்,  முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினும் தூத்துக்குடியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

வரும் ஏப்ரல் 19 ம்தேதி நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு முதல் கட்ட சுற்றுப்பயணத்தை அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதன் படி வருகிற மார்ச் 26 செவ்வாய்கிழமை மாலை 4 மணிக்கு தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் எம்.ஜி.ஆர் திடலில் தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.

அதே போல, திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் வரும் 22-ம் தேதி திருச்சியில் தனது பிரச்சாரத்தை துவக்க திட்டமிட்டுள்ளார். இதில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். 

அதன் படி வருகிற மார்ச் 26 செவ்வாய்கிழமை தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் தொகுதியில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே, தூத்துக்குடியில் ஒரே நாளில் முன்னாள், இந்நாள் முதல்வர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய இருப்பது தேர்தல் அரசியல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது.

  • Share on

தூத்துக்குடியில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது

தூத்துக்குடி அதிமுக வேட்பாளர் : யார் இந்த சிவசாமி வேலுமணி?

  • Share on